கோவையில் கத்திமுனையில் கார் கடத்திய வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது!

கோவை: கோவையில் கத்திமுனையில் கார் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் கத்திமுனையில் கார் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நாட்டுக்கல்லைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவரது நண்பர் சாஜா உசேன். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி சொகுசு காரில் கேரளாவில் இருந்து கோவைக்கு வந்தனர். பின் ஒப்பணக்கார வீதியில் ஒருவரைச் சந்தித்து அட்டைப்பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டு மீண்டும் இரவு 9 மணியளவில் கேரள மாநிலம் மன்னார்காடு நோக்கிச் சென்றனர். அப்போது கார் மதுக்கரை மரப்பாலம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று காரை வழிமறித்தது.

இதையடுத்து மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், முகமது முஸ்தபா காரின் ஓட்டுநர் இருக்கை அருகே உள்ள கண்ணாடியை உடைத்தனர். உள்ளே இருந்த இருவரையும் தாக்கி விட்டு சொகுசு காருடன் மர்ம கும்பல் கேரளா நோக்கிச் தப்பிச் சென்றது. இதையடுத்து மதுக்கரை போலீசில் முகமது முஸ்தபா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவல் ஆய்வாளர் முருகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே மதுக்கரையில் கொள்ளையடிப்பட்ட கார் கன்னியாகுமரி மாவட்டம் மித்திரவிளை காவல் நிலைய எல்லையில் இருந்தது மீட்கப்பட்டது. காரை வழிமறித்த லாரி குறித்து சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது லாரி கேரளா சென்றது தெரியவந்தது. இந்த வழக்கில் காரை வழிமறிக்க உதவிய லாரி ஓட்டுநர் முகமது அப்சல் என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவான மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அக்பர் என்பவரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பணத்துடன் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியை பிடிக்க இரண்டு தனிப்படை கேரளா விரைந்துள்ளது. விசாரணைக்குப் பின் அக்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவிநாசி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...