கோவை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீஸ்காரர் பாதுகாப்பாக மீட்டார்.

கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்துஹைதராபாத் வரை செல்லும் ரயில் 3-வது நடைபாதையில் வந்துள்ளது. ஓடிக்கொண்டிருந்த அந்த ரயிலில் பயணி ஒருவர் ஏற முயற்சித்தார். அப்போது கால்தடுமாறி கீழே விழுந்த அவர் ரயிலின் பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சிரிஜித் என்பவர் துரிதமாக செயல்பட்டு அந்தப் பயணியின் உயிரைக் காப்பாற்றினார். இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வெகுவாகப் பாராட்டினார். இதுதொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது.