கோவையில் போலீஸ், பறக்கும் படையுடன் இணைந்து துணை ராணுவம் பாதுகாப்பு, வாகன சோதனை!

கோவை: போலீஸ், பறக்கும் படையினடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: போலீஸ், பறக்கும் படையினடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களும் மூடி சீல் வைக்கப்பட்டன. சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், கட்சி விளம்பரங்கள் அகற்றப்பட்டன.

அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க 30 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கோவையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தினர் என்று அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (சி.எஸ்.ஐ.எப்.) 94 பேர் (ஒரு கம்பெனி) ரெயில் மூலம் நேற்று நள்ளிரவு கோவை வந்தனர். அவர்கள், கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது உடைமைகள், துப்பாக்கிகள், சமையலுக்குத் தேவையான அடுப்பு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வந்துள்ளனர்.

முதல்நாளான நேற்று அவர்கள் ஓய்வு எடுத்தனர். இந்நிலையில் இன்றுமுதல் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு, வாகன சோதனை, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...