வாளையாரில், ஜெலட்டின் குச்சிகள் பிடிபட்டதன் எதிரொலியாக காய்கறி லாரிகளில் போலீசார் தீவிர சோதனை!

கோவை: வாளையாரில், ஜெலட்டின் குச்சிகள் பிடிபட்டதன் எதிரொலியாக காய்கறி லாரிகளில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.


கோவை: வாளையாரில், ஜெலட்டின் குச்சிகள் பிடிபட்டதன் எதிரொலியாக காய்கறி லாரிகளில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக, கேரள மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்காடு போலீசார் வாளையார் பகுதியில், நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சேலத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிச் சென்ற லாரியை சோதனை செய்தபோது அதில், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

லாரியில் இருந்த பெட்டிகளில் 50 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 4,500 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என கேரள போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ஆத்துாரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளவரசன், கிளீனர் கார்த்திக் ஆகிய இருவரையும் கேரள போலீசார் கைது செய்தனர். தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வெடிபொருள் கடத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை புறநகர் எஸ்.பி. அருளரசு கூறுகையில், `ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பிடிபட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு கேரளா சென்ற அனைத்து காய்கறி லாரிகளிலும், தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்கறி லாரிகளில் உள்ள சரக்குகளை இறக்கி, ஏற்றுவதற்கு அரைமணி நேரம் பிடிக்கிறது. இருப்பினும், சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் கேரளாவுக்கு 300 லாரிகள் வரை செல்கின்றன. கேரளா செல்லும் லாரிகளை தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...