அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்..?
கோவை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளிலும் வேட்பு மனு தாக்கல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், அதிமுக மற்றும் திமுக இரண்டு அணியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதன்படி, அதிமுக-பாஜக இடையே இன்று காலை 8.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை முடிவில், சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து பாஜக மற்றும் அதிமுக சார்பில் எந்த அதிகாரப்பூர்வமாக தகவலும் வெளியாகவில்லை.
மேலும், 22 தொகுதிகளில் எந்ததெந்த தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கி உள்ளது, என்பது விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.