ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணிமனை தொழிலாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம்..!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணிமனை தொழிலாளர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம்..!

கோவை: தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று முதலாவது நாளாக கோவைபணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, நிர்வாகம் இரவோடு இரவாக இடமாறுதல் உத்தரவு வழங்கி அனுப்பியது. ஆதலால், இன்று இரண்டாவது நாளாக கண்டனம் தெரிவித்து பணிமனை வாசல் முன்பாக தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதலால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

26-02-2021,அன்று கோவை மண்டலத்தில் சுங்கம்-2கிளை முன்பாக கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்பொழுது, ஏ.டி.பி சங்கத்திற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் ஏ.டி.பி யின் அழுத்தம் காரணமாக MDயும்,GMயும் கீழ்க்கண்ட நபர்களுக்கு (தண்டனை அடிப்படையில்) கட்டாய இடமாறுதல் கொடுத்துள்ளார்கள், 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1.S.மோகன்ராஜ்-ஓட்டுநர்..எண்:-29298.(சுங்கம்2லிருந்து வால்பாறை கிளைக்கு)

2.N.திருமூர்த்தி:-நடத்துநர்,.எண்:-20347.(சுங்கம்2லிருந்து மேட்டுப்பாளையம்1)

3.R.காமராஜ்:-ப.எண்:-15988,நடத்துனர் பணி,(பாதுகாவலராக மாற்றுப்பணியில் உள்ளார்)

சுங்கம் 2லிருந்து கருமத்தம்பட்டி கிளை.

4.P.செல்வராஜ்:-தணிக்கையாளர்,.பஎண்:-16383,(உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து) திருப்பூர் கிளைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மாற்றப்பட்ட தொழிலாளர்களின்விவரம் தொடர்ந்து பணிமனை வாசலில் ஒட்டப்பட்டு உள்ளதால், பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது. உடனடியாக, பணி மாற்றம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும், என கோரிக்கை விடுத்து கோஷங்கள், எழுப்பி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...