கோவையில், முன்னறிவிப்பின்றி நேர்காணல் ரத்து கண்டித்து கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர்கள் சாலைமறியல்!

கோவை: கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர் நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து 350-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர் நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து 350-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.



கோவை டாடாபாத் கணிணி சேவை மையம் முன்பாக கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர்கள் பணிக்கான நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 4 ஆண்டுகளாக நேர்காணலுக்கான அழைப்பு விடுத்து அதன்பிறகு காரணமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. இந்த வருடமும் எந்த தெளிவான காரணமும் கூறப்படாமல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து நேர்காணலுக்காக வந்து ஒவ்வொரு வருடமும் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும், நான்காண்டுகளுக்கான நேர்காணல் கடிதத்தை கையில் ஏந்தி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.



தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதற்கான சரியான விளக்கத்தை அரசு அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் அரசு, பணிகளை நிர்ணயிக்கும்போது புதிய விண்ணப்பதாரர்களை எடுக்கக்கூடாது என்றும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...