பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பின்னர் கோயிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விரதம் இருந்து வந்த பக்தர்கள் 30 அடி நீளமுள்ள தீ குண்டத்தில் பக்தி பரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கோயில் அருளாளி பூ பந்து வீசி குண்டம் இறங்கியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறங்கினர்.

விரதம் இருந்த பெண் பக்தர்கள் பூ முடி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விவசாயம் செழிக்கவும், கொரானா நோய்த் தொற்றில் இருந்து நாடு மீளவும், மக்கள் நலமாக வாழ வேண்டியும் குண்டம் இறங்கியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.