பொள்ளாச்சியில் கிராம வருவாய் அலுவலர்கள் உண்ணாவிரதம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கிராம வருவாய் அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கிராம வருவாய் அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக வருவாய் ஊழியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம வருவாய்ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில், வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வருகின்றனர். எங்களது நியாயமான கோரிக்கைகளை கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித பயனும் இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய நாங்கள் 1995-ஆம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

23-ஆம் தேதி வருவாய்த்துறை மானிய கோரிக்கையின்போது எங்களது கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காலமுறை ஊதியம் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே எங்களை அழைத்துஉடனடியாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...