கோவையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டில் கோவை

கோவை: தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் சட்டமன்றங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் சட்டமன்றங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் மார்ச் 3ம் தேதி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 19ம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20ம் தேதி, வேட்பு மனு வாபஸ் கடைசி நாள்-மார்ச் 22ம் தேதி என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் கோவை மாவட்டம் வந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கோவையில் கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளிலும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 18 முதல் 19 வயதிற்குள்ள முதல் வாக்காளர்கள் 37 ஆயிரத்து 667 பேர் இடம்பெற்றுள்ளனர். 10 தொகுதிகளில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையத்தில் 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள், குறைந்தபட்சமாக வால்பாறையில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 335 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தற்போது 979 வாக்குச்சாவடி மையங்களில் 3,048 வாக்குச் சாவடிகள் உள்ளன. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 1000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் தற்போது 1,477 வாக்குச்சாவடிகளில் 1000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தலுக்கு கூடுதலாக 1,500 வாக்குச் சாவடிகள் வரை அமைக்க வாய்ப்புள்ளது. அதில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் விதிகளின் படியே பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்ல முடியும். இதற்காகவும் வேட்பாளர்களை கண்காணிக்கவும் பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் என 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்,’’ என்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...