தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த ஸ்மார்ட்சிட்டி குளங்களை அவசர அவசவரமாக மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வந்த நிலையில், அத்திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள 5 குளங்களிலும், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள் அமைப்பட்டுவந்தன.

தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு தேர்தல் நடைமுறை விதிகள் நாளை முதல் அமலுக்கு வருவதால், நாளை அமைச்சர் திறந்து வைக்க இருந்த பூங்காக்களை, மக்கள் பயன்பாட்டிற்கு, அவசர அவசரமாக மாநகராட்சி ஆணையர் இன்று திறந்து வைத்தார் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகளின் கீழ் பணிகள் பெரியகுளம், வாலங்குளம், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமாராசாமி, செல்வசிந்தாமணி ஆகிய குளங்களின் கரைகளில், பூங்கா வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் அவை அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுவதாக, மாவட்ட ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், இந்த பூங்கா இடங்களில், நடைபயிற்சி மேற்கொள்ளுதல், மிதிவண்டி பயிற்சி செய்தல், குழந்தைகள் விளையாடும் வசதிகள் உள்ளன இக்குளங்களை தூய்மையாக வைத்து கொள்ள அனைவரும் உதவிபுரிய வேண்டும், என்று பொதுமக்ககளை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இது கோவை மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் எனவும் இதனை மக்கள் பயன்படுத்தி மகிழ்வதோடு மட்டுமல்லாமல் இங்குள்ள நீர் நிலைகள், நீரை சார்ந்துள்ள உயிரினங்களை பாதுகாத்திட மக்கள் உதவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைப்பதாக தெரிவித்தார்.