கோவை: இன்று 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. கோவையில் தனியார் பஸ்களில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று முதல் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. வழக்கமாக கோவை கோட்டத்தில் 3000 நகரப் பேருந்துகளும், 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்றைய தினம் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் 700 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் இரண்டாம் நாளாக தொடரும் நிலையில் இன்று 20 முதல் 30 சதவிகித அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அ.தி.மு.க. தொழிற்சங்கமான ஏ.பி.டி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வந்தாலும், முக்கிய வழித்தடங்களில் அரசு நகரப் பேருந்துகள் குறைந்த அளவு மட்டுமே காணப்படுகின்றன. இதற்கிடையே தனியார் பேருந்துகளில் அவர்கள் விருப்பம்போல் கட்டணத்தை அதிகப்படுத்தியும், அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக் கொண்டும் செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாலும், தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாலும் பேருந்து நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம், சிங்காநல்லூர், சூலூர் பகுதிகளுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனைகள் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.