கோவை: கோவையில் நகைக் கடைக்குச் சென்று நகை வாங்குவதுபோல் நடித்து வெள்ளி டம்ளரை அபேஸ் செய்த கணவன் மனைவி கையும்களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் உள்ள ஒரு நகைக் கடையில் ஊழியராக வேலை பார்ப்பவர்ரவி. இடையர்பாளையத்தைச் சேர்ந்த இவரது கடைக்கு நகை வாங்குவதற்காக நேற்று மாலை ஒரு தம்பதியர் வந்தனர். அவர்கள் ரவியிடம் வெள்ளிப் பொருட்கள் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து அவர் ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தபோது திடீரென இரண்டுபேரும் சேர்ந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை திருடி தப்பிச் செல்ல முயன்றனர்.
இதனைப் பார்த்த ரவி அவர்கள் இரண்டுபேரையும் கையும் களவுமாகப் பிடித்து சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இரண்டுபேரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 55), அவரது மனைவி செல்வி (வயது 48) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் இதுபோன்று நகைக் கடைகளுக்கு சென்று நூதன முறையில் பலமுறை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து இன்று மதியம் சிறையில் அடைத்தனர். நூதன திருட்டில் ஈடுபட்ட இந்தந் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.