கோவைக்கு வந்தது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது; தொழில் நகரமான கோவை புதுமை படைக்கும் நகரம் - பிரதமர் புகழாரம்

கோவை: தமிழகத்தில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பா.ஜனதா சார்பில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வந்தார்.



கோவை: தமிழகத்தில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பா.ஜனதா சார்பில் மாபெரும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கோவை வந்தார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மாலை 3.20 மணிக்கு கோவை வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி விழா நடைபெற்ற கோவை கொடிசியா அரங்குக்கு கார் மூலம் மாலை 4 மணிக்கு வந்தார். அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அரங்கத்தில் உள்ள விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் முன்னிலை வகித்தார்.

பிரதமர் துவக்கி வைத்த திட்டங்கள்

பின்னர், நெய்வேலியில் ரூ.8 ஆயிரம் கோடியில் 1000 மெகாவாட் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட புதிய அனல்மின் திட்டமான லிக்னைட் அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2 ஆயிரத்து 670 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அர்ப்பணித்தார். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ரயில்வே பாலாத்தை திறந்து வைத்தார். பிரதமரின் நகர்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் திருப்பூர் வீரபாண்டி, மதுரை ராஜாக்கூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த குடியிருப்புகள் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.20 கோடியில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி தொகுப்புக்கும் அடிக்கல் நாட்டினார். கோவை, மதுரை, சேலம், தஞ்சை, வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ரூ.107 கோடியில் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள், என மொத்தம் ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் வரவேற்று பேசுகையில், "தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் அன்பு கொண்டவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடியை வரவேற்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். பிரதமர் மோடிக்கு செம்மொழியான தமிழ் மொழி மீது மிகவும் பற்று அதிகம். கடந்த முறை சென்னை வந்த போது கூட திருக்குறளை மேற்கொள் காட்டி பேசியிருப்பார்," என்றார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க குடிமராமத்து திட்டம், காவேரி டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் திட்டம், விலையில்லா வண்டல் மண் வழங்கும் திட்டம், ஆயிரம் கோடி ரூபாயில் புதிய தடுப்பணைக கட்டும் திட்டம், பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், அத்திக்கடவு-அவினாசி திட்டம், காவேரி ஆறு குறுக்கே புதிய கதவணை கட்டும் திட்டம், காவேரி-குண்டாறு இணைப்பு திட்டம், தாமிரபரணி–கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தமிழக அரசு, நீர் மேலாண்மையில் சிறந்த முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழ்நாட்டின் நீர்வளத்தை பெருக்க, நீரை முறையாக பயன்படுத்த, அரசு பல்வேறு உட்கட்டமைப்புகளை புதிதாக ஏற்படுத்தியும், மேம்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் ரூ.934 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாயை நவீனப்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டி உள்ளார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரத்து 247 ஏக்கர் பரப்பளவு பாசன நிலங்கள் பயனடையும்.

தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இம்மாதம், வெளியிடப்பட்ட புதிய தொழில் கொள்கை மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில், தொழில் வளத்தை மேம்படுத்த அரசு தெளிவான பாதையை வகுத்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரிய துறைமுகமான வ.உ.சி. துறைமுகத்தில் புதியதாக 5 மெகாவாட் சூரிய மின் சக்தி நிலைய திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் செயல்பட்டதைப் போல, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் 50க்கு50 என மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது, சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களிலிருந்து பகல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இரவு விமான சேவைகளையும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களின் விரிவாக்கம் எதிர்பார்க்கப்படலாம். கோவை ஒரு வணிக மையம் மற்றும் ஏற்றுமதி மையம், எனவே, துபாய்க்கு நேரடி விமானங்கள் வாரந்தோறும் இயக்கப்பட கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது :



கோவையில் நான் இருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொழில் நகரம் புதுமை படைக்கும் நகரம். கோவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி இருக்கின்றோம்.

பவானிசாகர் பாசனத்திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான , விவசாய நிலங்கள் நீர் பாசன வசதி பெறும். குறிப்பாக இத்திட்டத்தின் வாயிலாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவர். இத்தருணத்தில் வான்புகழ் வள்ளுவர் கூறிய ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர்’’ என்ற திருக்குறள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. தொழில்வளர்ச்சிக்கு தடையில்லா மின்சார தான் முக்கியம். இந்நிலையில் மின்திட்டங்களை துவக்கி வைத்துள்ளதற்கு பெருமிதம் கொள்கிறேன். நெய்வேலியில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பில் தொடங்கப்படும் மின் திட்டத்தில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 60 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்படும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டு வந்துள்ள திட்டங்கள் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்துவதோடு, பசுமைப் பொருளாதாரம் சார்ந்த முழு முயற்சிக்கு உறுதி சேர்க்கும். இது மட்டுமல்லாது இந்தியாவின் கடற்கரைகளில் அதிகளவில் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட துறைமுகமாக, இத்துறைமுகத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். உலக அளவில் வர்த்தகம் மற்றும் சரக்கு கையாளும் மையமாக இந்தியா உதவுகின்றது.

துறைமுகம் சார்ந்த ஆராய்ச்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டை சாகர் மாலா திட்டத்தின் மூலம் நன்கு உணரமுடியும். இத்திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டு முதல் 2035-ம் ஆண்டு வரையில் சுமார் ரூ. 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவற்றுள் துறைமுகங்களை நவீனமயமாக்கல், புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், இணைப்புச் சாலைகள் விரிவாக்கம், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி கடற்கரை பகுதி மக்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் சென்னைக்கு அருகே குரோம்பேட்டையில் பல்வேறு சரக்குகளை கையாளும் ஒரு புதியதொழிற் பூங்கா விரைவில் தொடங்கப்பட உள்ளது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் வ.உ.சி துறைமுகப் பகுதியில் உள்ள சாலையை விரிவுபடுத்தப்பட உள்ளது. சரக்கு வாகனங்கள் துறைமுகத்திற்கு வந்து செல்லும் நேரத்தை குறைக்கவும் உதவுகின்றது.

வளர்ச்சியும் சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. துறைமுகத்தில் ஏற்கனவே 500 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது 140 கிலோ வாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மட்டுமல்லாமல், 5 நகரங்கள் 5 மெகா பட்ஜெட் ரூ. 300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொண்டிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது. இத்திட்டத்தின் மொத்த மின் தேவையில் 65 மின் தேவையை நிறைவு செய்ய உதவும்.

தனிநபரின் வளர்ச்சியின் மையக்கருவாக இதனை உறுதி செய்யும் அடிப்படை வழிகளில் ஒன்று அனைவருக்கும் குடியிருப்புகளை ஏற்படுத்தி தருவதாகும். அம் மக்களின் கனவுகளை எதிர்பார்க்கும் வண்ணமாக பிரதமரின் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் சுமார் ரூ. 332 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4344 வீடுகளை திறந்து வைத்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன நிலையில், குடியிருப்புகள் இல்லாத மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 9 ஸ்மார்ட் சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களுக்கான அடிக்கல் நாட்டியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரங்களில் பல்வேறு சேவைகளை செவ்வனே செய்து வைக்கப்பட்ட சிறப்பாய் தொழிநுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் திட்டங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்விருக்கும் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

மக்களின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றுவோம் சுயசார்பு பாரதத்தை உருவாக்குவோம். இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக, பிரதமர் மோடி பேசத் தொடங்கும்போதும், பேசி முடிக்கும் போதும் வணக்கம், நன்றி என்று கூறினார்.

இவ்விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், துணை கமிஷனர் மதுராந்தகி, காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...