பட்ஜெட்டில் கூறியதுபோல 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளிப் பூங்காக்கள் தொடங்கியுள்ளோம்: கோவையில் பிரதமர் மோடி பெருமிதம்!

கோவை: பட்ஜெட்டில் கூறியதுபோல 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளிப் பூங்காக்களை தொடங்கியுள்ளோம் என்று கோவையில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.


கோவை: பட்ஜெட்டில் கூறியதுபோல 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளிப் பூங்காக்களை தொடங்கியுள்ளோம் என்று கோவையில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

அரசு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி இன்று மாலை கோவை வந்தார். கோவை கொடிசியா அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கெடுத்து 12,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.



மேடைக்கு வந்த பாரத பிரதமர் மோடியை வானதி சீனிவாசன், நந்தகுமார், இல.கணேசன், ராதாகிருஷ்ணன், செல்வகுமார் உள்பட பலர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து மோடியை வரவேற்று கொங்கு தமிழில் உருவாக்கப்பட்ட பாடல் மேடையின் பின்பகுதியில் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மோடி பேசியதாவது:-



வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர், வெற்றிவேல், வீரவேல். செயலாற்றல் மிக்க கொங்கு மண்டல மக்களை வணங்குகிறேன். கோவை கொங்கு மண்டலம் பல்வேறுவிதமான அறிஞர்கள், விஞ்ஞானிகள் உருவான மண். அதில் நின்று நான் பேசுவதில் பெருமை கொள்கிறேன். இந்த ஆண்டு தமிழகம் புதிய அரசை காணப் போகிறது. அதற்கு எல்லாவிதமான செயல்பாடுகளும் மக்கள் முகத்தில் தெரிகிறது.

மக்கள் ஒரு சிறந்த முடிவுக்கு வந்துள்ளனர். வளர்ச்சிக்கு எதிராக மக்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். வளர்ச்சிப்பாதையில் இந்தியாவை யார் நடத்துகிறார்களோ அவர்கள் பக்கம் மக்கள் இருக்க வேண்டுமென முடிவு செய்துள்ளனர். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியும் அ.தி.மு.க. அரசும் எடுத்துக்காட்டாகும். 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறு குறு தொழில் தொடங்க வங்கி மூலம் கடனுதவி செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் எக்கு பொருட்களுக்கு கலால் வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாம்பியன் என்ற வலைதளத்தை உருவாக்கி சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் அவர்களது சந்தேகங்கள் களையப்பட்டு இருக்கிறது. நாங்கள் பட்ஜெட்டில் கூறியதுபோல 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளோம். ஆதலால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு மற்றும் பலன் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்கின்ற நிலைமையை தி.மு.க. இறந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.



தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து நடத்தக்கூடிய கூட்டங்கள் அனைத்துமே ஊழலுக்கான கணிப்பொறி போல் காட்சியளிக்கிறது. மக்கள் இவர்களை நம்ப தயாராக இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கண்டுகொள்ளப்படவில்லை. அ.தி.மு.க.வும் மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதாவும்தான் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். மக்கள் அதற்கு தயாராகி வருகின்றன. பாரத மாதாவுக்கு ஜெ. நன்றி வணக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...