கோவையில் பிரதமர் மோடி..! 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்!

கோவை: கோவை: கோவை வந்த பாரத பிரதமர் மோடி 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.



கோவை: கோவை வந்த பாரத பிரதமர் மோடி 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கோவை வந்த பாரத பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உட்பட அதிமுக அமைச்சர்கள் பாஜக பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



அதனைத் தொடர்ந்து, கோவை கொடிசியா அரங்கில் நடந்த அரசு நலத்திட்ட பணிகள் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் நடந்து முடிந்த பணிகளை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. மோடி 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினார்.



அப்பொழுது அவர் பேசும்போது, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற குறளை எடுத்துக் காட்டியும், தமிழக மக்களுக்கு வணக்கம் என தமிழில் கூறியும் தனது உரையைத் தொடங்கினார்.

அவர் மக்களுக்கு அர்ப்பணித்த திட்டங்கள் வருமாறு:-

நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். இது ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் தலா 500 மெகாவாட் திறன் உள்ளது. ரூபாய் 8000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி மையம் நெய்வேலி சுரங்கத்தில் உள்ள பழுப்பு நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா. தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு பயன் அளிக்கும். இதன் 65 சதவீத பங்கு தமிழகத்திடம் உள்ளது. திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இத்திட்டம் ரூபாய் 3000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கீழ்பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல் புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பவானிசாகர் அணை மற்றும் கால்வாய் பணி 1955ம் ஆண்டு முடிக்கப்பட்டது. கீழ்பவானி அமைப்பில் கீழ்பவானி கால்வாய் திட்டத்தில் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி கால்வாய்கள் மற்றும் காலிங்கராயன் கால்வாய் உள்ளன. இது ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு நீர் பாசன வசதி அளிக்கிறது.

கீழ் பவானி திட்ட கால்வாய் விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணிகள் நபார்டு கூட்டமைப்பு மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் ரூபாய் 934 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் அமைத்து தவிர 824 மதகுகள் 176 வடிகால்கள் மற்றும் 32 பாலங்கள் பழுது பார்க்கப்பட்டு அமைக்கப்படுகின்றன. சிதம்பரனார் துறைமுகத்தில் 8வழி கோர பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பலத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.



இது இந்தியாவின் முக்கியமான துறைமுகம். தற்போது 76 சதவீதம் சரக்குகள் சாலை வழியாக கோரம்பள்ளம் வளத்தைப் பயன்படுத்தி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பாலம் 1964 ஆம் ஆண்டு 14 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மீது தினந்தோறும் சராசரியாக 3000 கனரக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஏற்படுகிறது. சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்கும் துறைமுகப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் 8வழி கோரப்படும் பாலம் மற்றும் ரயில்வே பாலம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்மூலம் பாலத்தின் இரு புறங்களிலும் அகலப்படுத்தபட்டன. டி டி பி எஸ் சுற்றிலிருந்து சிட்டி லீக் சுற்று வரை சாலைகள் இருபுறத்திலும் 42 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டு இரு வழிகள் சேர்க்கப்பட்டுள்ளன இதற்கு சாகர்மாலா திட்டம் மூலம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. வ.உ சிதம்பரனார் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 மெகாவாட் சூரிய மின்சக்தி தொகுப்புக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்தை 20 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 80 லட்சம் யூனிட் க்கு மேல் மின் உற்பத்தி செய்யும். இதைத் தொடர்ந்து பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

திருப்பூர் வீரபாண்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டிய 1280 குடியிருப்புகள் திருக்குமரன் நகரில் கட்டப்பட்டுள்ள 1248 குடியிருப்புகள் மதுரை ராஜா கூறுகையில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள் திருச்சி இருங்கள் ஊரில் கட்டப்பட்ட 1088 குடியிருப்புகள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த குடியிருப்புகள் ரூபாய் 330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. 



ஒவ்வொரு குடியிருப்பும் நகர்ப்புற ஏழை குடிசை வாசிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. ஹால், சமையல் அறை கழிவறை, குளியலறை, வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகளில் தார் சாலை தெருவிளக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ரேஷன் கடை அங்கன்வாடி மையம் நூலகம் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

மேலும், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர், திருச்சி, திருப்பூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி உட்பட ஒன்பது ஸ்மார்ட்சிட்டி நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த மையங்கள் ரூபாய் 107 கோடி செலவில் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...