திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சூழ்நிலையில், மாதம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் 11 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

இதில் பெறப்பட்ட 32 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.