திருப்பூரில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தங்களது சேலைகளை கொண்டு கூடாரம் அமைத்து போராட்டம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தங்களது சேலைகளை கொண்டு கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தங்களது சேலைகளை கொண்டு கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வெறும் 2,000 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனை உயர்த்தி வழங்குவதாக 2016ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டு மொத்த தொகை, அமைப்பாளர்களுக்கு 5 லட்சம், சமையலர் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் வழங்கி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 4வது நாளான இன்று, வெயில் அதிகமாக இருப்பதால் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் டெண்ட் அமைக்க அனுமதி கேட்டனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.



இதையடுத்து, சத்துணவு ஊழியர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த சேலையை கூடாரமாக அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...