கோவை ஆன்லைன் மீடியாவிற்கு பிரதமர் விழாவிற்கு அனுமதி மறுப்பு; பாஸ் பெற அலைகழிப்பு

கோவை: இன்று கோவை வரும் பாரத பிரதமர் விழாவில் கலந்து கொள்வதற்காக அடையாள அட்டை கேட்டு சென்ற ஆன்லைன் மீடியாவை சேர்ந்த செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை, என்று மக்கள் செய்தி தொடர்பு அலுவலர், சுகுமாரன் தெரிவித்தார்.


கோவை: இன்று கோவை வரும் பாரத பிரதமர் விழாவில் கலந்து கொள்வதற்காக அடையாள அட்டை கேட்டு சென்ற ஆன்லைன் மீடியாவை சேர்ந்த செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை, என்று மக்கள் செய்தி தொடர்பு அலுவலர், சுகுமாரன் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியபோது, இது எங்களுடைய பொறுப்பல்ல, மாநகர காவல் துறை சார்பாக வழங்கப்படுகிறது, என்றார். அப்படி என்றால், நேற்று புகைப்படம் கொடுக்கும்பொழுது எதற்காக பத்திரிகையாளர்களின் விவரங்களை சேகரித்தனர்? எதற்காக கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது? ஆன்லைன் மீடியாவுக்கு அனுமதி இல்லை என்பது செய்தி தொடர்பு துறைக்கு முன்னதாக தெரியாதா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிபியுள்ளனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வில் பங்கேற்று 12,400 கோடி ரூபாய்கான திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதன் பின்னர் கட்சியினரிடயே பொதுகூட்டத்தில் பேசுகிறார். கோவையில் பிரதமர் கலந்து கொள்ள உள்ள அரசு நிகழ்ச்சி, கோவை கொடிசியா உள்ளரங்கிலும், பாஜக கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டம் கொடிசியா வெளியே உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.

அரசு நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்களுக்கு உண்டான அனுமதி பாஸ் மாவட்ட செய்தி தொடர்பாளர் அலுவலத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், பொதுக்கூட்டத்திற்கு பாஜக கட்சியினரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவன அடையாள அட்டை மற்று புகைபடங்கள், ஆதார் ஆகியன சமர்பித்தும், அடையாள அட்டை பெற அலைகழிக்கப்பட்டனர். பொதுகூட்டத்தில் பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் குறிப்பிடும் இடத்தில் வந்து அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம், என தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் காவல்துறை கெடுபிடி அதிகம் இருப்பதாக கூறிய கட்சியினர், வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் வந்து பெற்று கொள்ளுமாறும் வரும்போது இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வரவேண்டும், என திடீரென தெரிவித்தனர். இதனால், அங்கும் இங்கும் அலைந்து போட்டோகளை கொடுத்து அனுமதி சீட்டை ஒருவழியாக பெற்று சென்றனர்.

நேற்று, பாஜக பொதுக்கூட்டத்திற்கு உண்டான அனுமதி பாஸ்களை பாஜகவினர் வழங்கிய நிலையில், அரசு நிகழ்ச்சிக்கு உண்டான அனுமதி பாஸ்களை மாவட்ட செய்தி தொடர்பாளர் அலுவலகத்திற்கு சென்று கேட்டதற்கு செய்தி தொடர்பு அலுவலர்கள் முறையான பதில் அளிக்காமல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை தெரிவித்தனர்.

ஆனால், இது குறித்தான உண்மை நிலவரத்தை தெரிவித்த சில அலுவலர்கள், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு 50 பத்திரிகையாளர்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு மட்டும் தான் மதியம், இரவு சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மேற்கொண்டு பத்திரிகையாளர்கள் வந்தால் சாப்பாடு மற்றும் இட ஒதுக்கீடு பிரச்சினை ஏற்படும் என்பதால் தங்களால் மற்ற பத்திரிகையாளர்களுக்கு அனுமதி பாஸ்களை வழங்க இயலவில்லை, என்று தெரிவித்தனர்.

பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை துவக்கி வைக்க வரும் அரசு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களின் சாப்பாடு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையை மாறியது ஏன்..? என்று பத்திரிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த, கடைசி நிமிட குளறுபடிகள், பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...