கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமி சிலையை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை காட்டூர் புதியவர் நகர் பகுதியில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பணியில் இருக்கும் பூசாரி நேற்று மாலை கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். இன்று காலை 8 மணி அளவில் கோயிலைத் திறப்பதற்காக வந்தார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலை மாயமாகி இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் கோவை காட்டூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த குற்றப்பிரிவு போலீசார் கைரேகை நிபுணர்கள் உள்பட மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை செய்தனர். தொடர்ந்து சாமி சிலையை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.