கோவை: போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரிக்க உதவிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார்.

கோவை இடையர் வீதியைச் சேர்ந்த கல்யாண சுந்தரலிங்கம் என்பவரது மகள் லிங்கதேவி. இவர் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கடந்த 1986, 2001, 2002 ஆம் ஆண்டுகளில் எனது தந்தை கல்யாண சுந்தரலிங்கம் (வயது 74) மற்றும் சகோதரர்கள் கருப்பண்ண கவுண்டர் வீதியில் மூன்றே கால் சென்ட் இடத்தை வாங்கினர்.
இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு செல்வமணி என்பவர் சில போலி ஆவணங்களை எடுத்துக் கொண்டு எங்களது இடத்தில் வந்து தகராறு செய்தார். சர்வே எண் 296-ல் உள்ள எங்களது இடத்துக்கு அவர் 295 சர்வே எண் கொண்ட ஆவணங்களை வைத்திருப்பதாகக்கூறி அடியாட்களுடன் புகுந்து தகராறு செய்து ஒரு வீட்டில் குடியேறினார். அப்போது போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன் இந்த செயலை அவர்கள் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது எனது தந்தை வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே இந்த இடத்துக்கு உரிய வீட்டு வரி மற்றும் மின் இணைப்புகளை தனது பெயருக்கு செல்வமணி மாற்றினார். நாங்கள் மீண்டும் அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் புகார் அளித்ததன்பேரில் மீண்டும் எங்களது பெயருக்கு 2018-ஆம் ஆண்டு ஆவணங்கள் மாற்றப்பட்டன.
இந்நிலையில் போலியான ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு தனது பெயருக்குப் பட்டாவை மாற்றியுள்ளனர். இந்த ஆவணத்தை வைத்து செல்வமணி என்பவர் தனது மகன் ஆனந்தராஜ் என்பவருக்கு 2021 ஜனவரி மாதம் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் மூன்று போலி பத்திரங்களை கொடுத்துள்ளார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது,