கோவை: கோவை அருகே விசைத்தறி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கோவை அருகே விசைத்தறி தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி தாலுகா ராமாமாட்சிபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் நடந்து சென்ற பொதுமக்கள் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தியதில் கத்தியால் குத்தப்பட்டு அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பெயர் செந்தில் (வயது 40) என்பதும், அவர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன் விரோதமா? கள்ளக்காதல் பிரச்சினையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.