உடுமலை தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு பெற்றுள்ளன: கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம்!

கோவை: உடுமலை தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு பெற்றுள்ளன என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.


கோவை: உடுமலை தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு பெற்றுள்ளன என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆவல் சின்னாம்பாளையம், பொன்னே கவுண்டனூர், ஊஞ்சவெலம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 980 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் விழாவை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-



உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சவெலம்பட்டி ஊராட்சிக்கு மட்டும் 600 பயனாளிகளுக்கு ரூபாய் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட்டன.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் உட்பட்ட ஊராட்சிகளில் 6,500 வீடுகள், 4,000 இலவச வீட்டுமனை பட்டா, 23 ஆயிரம் முதியோருக்கு ஓய்வூதியம், 7 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு, 3,500 பேருக்கு தாலிக்கு தங்கம், 2500 பேருக்கு 50 சதவீத மானியத்துடன்கூடிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் தன்னிறைவு ஊராட்சியாக மாற்றப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...