இன்றுமுதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கோவையில் 30 சதவீத பஸ்கள் இயக்கம்!

கோவை: இன்றுமுதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


கோவை: இன்றுமுதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்துதுறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.



வழக்கமாக கோவை கோட்டத்தில் 3 ஆயிரம் நகரப் பேருந்துகள், 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 30 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.



அ.தி.மு.க. தொழிற்சங்கமான ஏ.பி.டி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.



தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...