திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: ஆய்வில் உறுதி!

கோவை: பொதுப்பணித் துறை சார்பாக தமிழகத்தில் 34-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


கோவை: பொதுப்பணித் துறை சார்பாக தமிழகத்தில் 34-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு குறித்த விவரத்தை மாதம்தோறும் பொதுப்பணித்துறையினர் கணக்கிடுகின்றனர். 2020 டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை, காஞ்சிபுரத்தில் 0.15 மீட்டர், தஞ்சாவூரில் 0.07 மீ., கன்னியாகுமரியில் 0.27 மீ. நிலத்தடி நீர் சரிந்துள்ளது. ஆனால், 34 மாவட்டங்களில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு இறுதியில் பெய்த புயல் மழை காரணமாக, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் கருதுகின்றனர்.

அதிகபட்சமாக பெரம்பலுாரில் 3.06 மீ., அரியலுாரில் 2.38 மீட்டர், கள்ளக்குறிச்சியில் 2.87 மீட்டர் உயர்ந்துள்ளது. ஆனால், முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரி மாத நிலத்தடி நீர் மட்டம், ஒன்பது மாவட்டங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 0.41 மீ., ஈரோட்டில் 1.23 மீ., நாமக்கல்லில் 0.25 மீ., சேலத்தில் 0.12 மீ., நீலகிரியில் 0.65 மீ., நிலத்தடி நீர் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 0.51 மீ., நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...