பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி நேற்று நள்ளிரவில் மயான பூஜை நடைபெற்றது. அப்போது அருளாளி ஒருவர் எலும்புத் துண்டை வாயில் கவ்வியபடி கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை புதன்கிழமை நள்ளிரவில் நடந்தது. இதையொட்டி, நள்ளிரவு 12.30 மணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட பல அருளாளிகள் அம்மன் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்குச் சென்றனர்.
அங்கு எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்துவந்தார். அதிகாலை 2.30 மணிக்கு பம்பை மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அம்மன் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால் அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின் பம்பைக்காரர்கள் பக்தி பாடல்கள் பாடினர்.

அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக்கொண்டு கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடமாடினார். அவர் ஆடியபடி அம்மன் உருவத்தைச் சிதைத்தார்.
அப்போது, அம்மனின் கழுத்துப்பகுதியில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. மயான பூஜை பின்னிரவு 2.45 மணிக்கு முடிவடைந்தது.

பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். பலர் அருள் வந்து ஆடினர். காலை ஆழியாற்றங்கரையில் கோயில் தலைமை குருக்கள் கும்பஸ்தாபனம் செய்தார். அம்மன் உருவத்தின் கழுத்துப்பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்கப்பட்டு சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது.