இன்று கோயம்புத்தூரில் இருப்பேன்..!! பிரதமர் மோடி தமிழில் டுவிட்..!
கோவை: பிரதமர் மோடி இன்று கோவை வருவதை முன்னிட்டு 24/7 மணி நேரமும் விடிய!விடிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடக்கும் அரசு விழா மற்றும் கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள பா.ஜ.க, பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் கோவை வரவுள்ளார்.
இன்று கோயம்புத்தூரில் இருப்பேன்..!! பிரதமர் ட்வீட்
இது குறித்து, தமிழில் டுவீட் செய்துள்ள, பிரதமர், "தேச வளர்ச்சிக்கு தமிழ் நாட்டின் பங்களிப்பு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது.தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்பதில் மத்திய அரசு பெருமைப் படுகிறது. பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்.

பிரதமரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்..!
முதல்வர், துணை முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள், பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. கோவை கொடிசியா அரங்கில் நடக்கும் அரசு விழா மற்றும் கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள பா.ஜ., பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் கோவை வருகிறார். பின்னர், இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுவிட்டு இரவு, 7.30 மணியளவில், தனி விமானம் மூலம் தலைநகர் டில்லிக்கு செல்கிறார்.
பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கோவை விமான நிலையம் முதல் கொடிசியா மைதானம் வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணிகளை பார்வையிட, டி.ஜி.பி., திரிபாதி நேற்று மதியம் விமானத்தில், கோவை வந்தார். சிறப்பு பாதுகாப்பு கமாண்டோக்கள், போலீஸ் உயரதிகாரிகள் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரதமர் வருகை தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் விமானநிலையத்தில் இருந்து கொடிசியா வரை, அவிநாசி ரோட்டில் சென்று அரங்கு மற்றும் மைதானத்தை அடையும் வகையில் ஒத்திகை பார்க்கப்பட்டது. டில்லி சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் தமிழக போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

கோவை விமான நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார், பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொடிசியா அரங்கம் மற்றும் பொதுக் கூட்டம் நடக்கும் விழா மேடை உள்பட அனைத்து இடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் போலீசார், 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் பங்குபெற்று உள்ள பாஜகவின் பொதுகூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பா.ஜ.க, தலைவர் எல். முருகன் நேற்று, பொதுக்கூட்ட மேடையை பார்வையிட்ட பின், நிருபர்களிடம் தெரிவித்தார்.
''தமிழகத்தில் இனியும் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகாத நிலையில், இரண்டாவது முறையாக பிரதமர் வருகிறார். நாளை (இன்று) நடக்கும் விழாவில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். பிரதமர் வருகை அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பர்; அதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்,'' என்றார்.