கேரளாவிலிருந்து வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதி - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அத்துடன் இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அத்துடன் இ ரெஜிஸ்ட்ரேசன் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் சார்பில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழாவையொட்டி செஹலி என்னும் பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் 1098 இலவச தொலைபேசி எண்ணினை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், தேயிலை தோட்டங்களில் அதிகளவு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் உள்பட அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இச்செயலி அமையும் என்றார்.



மேலும், பெண் குழந்தைகளிடையே தன்னம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில் உன் வாழ்க்கை உன் கையில் என்ற மாவட்ட ஆட்சியரின் கையொப்பமிட்ட கடிதங்கள் பள்ளிகளில் பயிலும் 1,15,000 மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். விழாவில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...