தமிழகத்தை இயற்கை விவசாய நிலமாக்கும் நோக்கில் 2 நாள் விவசாய சுற்றுலா: ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு!

கோவை: தமிழகத்தை இயற்கை விவசாய நிலமாக்கும் நோக்கில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் 2 நாள் விவசாய சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: தமிழகத்தை இயற்கை விவசாய நிலமாக்கும் நோக்கில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் 2 நாள் விவசாய சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.



தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும்‌ நோக்கத்தில்‌ ஈஷா விவசாய இயக்கம்‌ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறுவகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம்‌ முழுவதும்‌ நடத்தி வருகிறது. அதன்‌ ஒரு பகுதியாக தென்னையில்‌ பல பயிர்‌ சாகுபடி செய்து நன்கு லாபம்‌ ஈட்டு வரும்‌ முன்னோடி விவசாயிகளின்‌ தோட்டங்களை பார்வையிடுவதற்காக 2 நாள்‌ இயற்கை விவசாய சுற்றுலா ஒன்றை பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில்‌ ஏற்பாடு செய்தது. இதில்‌ கோவை, ஈரோடு, சேலம்‌, மதுரை, வேலார்‌ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து 55 விவசாயிகள்‌ பங்கேற்றனர்‌.



உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும்‌ பொள்ளாச்சி பகுதிகளில்‌ ஈஷா‌ வழிகாட்டுதலுடன்‌ வெற்றிகரமாக விவசாயம்‌ செய்து வரும்‌ முன்னோடி விவசாயிகளின்‌ தோட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்‌. தென்னை மரங்களுக்கு நடுவே ஐந்தடுக்கு சாகுபடி முறையில்‌ தோட்டத்தை உருவாக்குவது, ஆடு, மாடு, கோழி, மீன்‌ மற்றும்‌ தேனீ வளர்ப்புடன்‌ ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்றும்‌ வழிமுறைகள்‌, பண்ணைக்குட்டை மற்றும்‌ மழைநீர்‌ சேகரிப்பு அமைப்புகளை கட்டமைப்பது, நீர்‌ மேலாண்மை, விளைபொருட்களை மதிப்புக்‌ கூட்டி சந்தைப்படுத்தும்‌ வழிமுறைகள்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை விவசாயிகள்‌ நேரடியாக பார்த்து தெரிந்துகொண்டனர்‌.



மேலும் அப்போது விவசாயிகளின் சந்தேகங்கள்‌ மற்றும்‌ கேள்விகளுக்கு ஈஷா விவசாய இயக்க பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ முன்னோடி இயற்கை விவசாயிகள்‌ பதிலளித்தனர்‌. ஈஷா விவசாய இயக்கத்தின்‌ மூலம்‌ தமிழகம்‌ முழுவதும்‌ இதுவரை 8 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...