கோவை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும்விதமாகவும், அவர் அறிவித்த திட்டங்களை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் கோவை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரியும், தங்களுக்கு வழங்க வேண்டிய முறையான கால முறை ஊதியம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போன்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சம் மற்றும் ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஆர்.சாந்தி தெரிவித்தார்.

மேலும், தங்களது கோரிக்கைகளை கருத்தில்கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அவற்றை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும்விதமாகவும், அவர் அறிவித்த திட்டங்களை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.