ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம்: கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வழங்கியது!

கோவை: கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் 50-க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா போத்தனூர் ரோட்டில் உள்ள பாத்திமா கனி மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட தலைவர் உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி தாளாளர் இஸ்மாயில் இம்தாதி சமூக சேவை ஆற்றுவதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்.



மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சம்பத்குமார் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். மேலும், இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில சமூக சேவைத்துறை செயலாளர் ஜலாலுதீன், இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ஷபீர் அஹ்மத், கோவை பேப்பர்ஸ் மார்ட் உரிமையாளர் சுதாகரன், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி, எஸ்.ஏ.வெஜிடபிள்ஸ் உரிமையாளர் எஸ்.ஏ.பஷீர், இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சையத் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



கோவை கரும்புக்கடை, கோட்டைமேடு, வெள்ளலூர், செல்வபுரம், மேட்டுப்பாளையம், போத்தனூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.



முடிவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...