பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் 8 பவுன் நகை திருடப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையத்தில் அரசு பஸ் கண்டக்டர்வீட்டில் 8 பவுன் நகை திருடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையம் சன்ரைஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுவீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். காலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 சவரன் நகை ரூ 15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.