ஜெயலலிதா பிறந்த நாளை ஏழைகள் மனம் மகிழும்விதமாக உதவிகள் வழங்கி கொண்டாடுவோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருப்பம்!

கோவை: ஜெயலலிதா பிறந்த நாளை ஏழைகள் மனம் மகிழும்விதமாக உதவிகள் வழங்கி கொண்டாடுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருப்பம் தெரிவித்துள்ளார்.



கோவை: ஜெயலலிதா பிறந்த நாளை ஏழைகள் மனம் மகிழும்விதமாக உதவிகள் வழங்கி கொண்டாடுவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சரும், கோவை தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகிபோரது ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைமைக் கழகம் அறிவித்தபடி பொதுக்கூட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் பேச்சாளர்கள் விவரம் வருமாறு:-

வால்பாறை பகுதியில் நாளை 24-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் சி.டி.சி. அப்துல் ஜப்பார், குன்னூர் சிவா ஆகியோர் பேசுகின்றனர். சூலூர் தொகுதியில் 28-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி செய்தித் தொடர்பாளர் ஏ.ஏஸ்.மகேஸ்வரி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் என்.ஜி.கே. முத்துகிருஷ்ணன், கூடலூர் ராமமூர்த்தி ஆகியோர் பேசுகிறார்கள்.

கிணத்துக்கடவு பகுதியில் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சி அமைப்புச் செயலாளர் தாமோதரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வி.எஸ்.பூமி பாலன், எம்.ஏ.ரகுமான் ஆகியோர் பேசுகின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் 2-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விவசாய பிரிவு துணைச் செயலாளர் எம். பாரதி, அம்மா ரவி ஆகியோர் பேசுகின்றனர்.

பொள்ளாச்சி தொகுதியில் 2-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வர்த்தக அணி செயலாளர் பி.பி சஜீவன் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை - எளிய மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆதலால் இந்த பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களை மகிழ்விக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...