வழிதவறி கோவை வந்த மூதாட்டிகோவை போலீசாரிடம் ஒப்படைப்பு!

கோவை: கோவையில் மூதாட்டி ஒருவர் எந்த ஊர் செல்கிறோம் என்பது தெரியாமல் கோவையில் வந்து இறங்கி சாலையில் புலம்பி அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் விசாரணை செய்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவையில் மூதாட்டி ஒருவர் எந்த ஊர் செல்கிறோம் என்பது தெரியாமல் கோவையில் வந்து இறங்கி சாலையில் புலம்பி அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து பொதுமக்கள் விசாரணை செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

வேலம்மாள் என்ற பெயர்கொண்ட பாட்டி கோவை காந்திபுரம் 100 அடி சாலைப் பகுதியில் சாலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். அங்கு சென்றவர்கள் அவரிடம் பசிக்கிறதா? சாப்பிடுகிறீர்களா? எனக் கேட்டதற்கு அந்த மூதாட்டி, `இது எந்த ஊர்?' என்று கேட்டார். வழி தெரியாமல் இந்த ஊருக்கு வந்துவிட்ட இவர் `எங்கே செல்வது என தெரியவில்லை' என புலம்பி அழுதார்.

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கேட்டதற்கும் அந்த மூதாட்டியால்ஊர், பெயர் சொல்லத் தெரியவில்லை. அதனால் அந்த பகுதிக்குள் சென்ற மக்கள் மனமுருகி மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்து பஸ் ஏற்றி கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பாட்டி குறித்த விவரங்களை விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...