கோவை: கோவையில் தனது கணவரின் பின்னால் பைக்கில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை இன்னொரு பைக்கில் வந்தவர்கள் பிடுங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் தனது கணவரின் பின்னால்பைக்கில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை இன்னொரு பைக்கில் வந்தவர்கள் பிடுங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மனைவி லத்திகா (வயது 34). இவர் நேற்றிரவு தனது கணவருடன் மோட்டார்சைக்கிளில் கோவை புதூரை அடுத்த புட்டுவிக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 3 பேர் திடீரென லத்திகா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு வேகமாக தப்பிச்சென்றனர்.
இதையடுத்து லத்திகா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.