`அம்மா... எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்' என்று கோவை அங்கன்வாடி பணியாளர்கள் தீபம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை: நாளை ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருக்கும் சூழலில்,`அம்மா... எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்' என்று கோவை அங்கன்வாடி பணியாளர்கள் தீபம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நாளை ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படவிருக்கும் சூழலில்,`அம்மா... எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்' என்றுகோவை அங்கன்வாடி பணியாளர்கள் தீபம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமையலர், அங்கன்வாடி பணியாளர், மேற்பார்வையாளர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாகவும், ஊதிய உயர்வு கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் அம்மாவுக்கு விளக்கேற்றி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தும்படி கூறியிருந்தார்.



இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடிய அங்கன்வாடி பணியாளர்கள் கைகளில் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர்.



திடீரென அனைவரும் தீப்பெட்டியை எடுத்து விளக்கேற்றி கைகளில் பிடித்தபடி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அவர்கள், `ஜெயலலிதா அம்மா அவர்களே நீங்கள் இருந்திருந்தால் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி இருப்பீர்கள். நாளை உங்களுடைய பிறந்தநாள். ஆதலால் எங்கள் கோரிக்கையை நாங்கள் உங்கள் முன் வைக்கிறோம். நீங்களே எங்கள் கோரிக்கையை பிறந்தநாளன்று நிறைவேற்றித் தாருங்கள்' என கோஷங்கள் எழுப்பினர்.



இந்த நூதனமான வித்தியாசமான அணுகுமுறை கொண்ட போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்குள் மொத்தமாக ஒளி தெரிவதை அந்தவழியாகச் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.



Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...