கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: கார்த்திக் எம்.எல்.ஏ. கோரிக்கை!

கோவை: தென் மாவட்ட மக்களின் நலன் கருதி, நிறுத்தப்பட்ட கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: தென் மாவட்ட மக்களின்நலன் கருதி, நிறுத்தப்பட்ட கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் வழியாக ராமேஸ்வரத்துக்கு மீட்டர்கேஜ் பாதையில் முன்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கோவை - போத்தனூர் -பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்றும்பணிகள் மேற்கொள்வதற்காக அந்த ரயில் சேவையும், கோவை - பழனி வழியே மதுரையை இணைக்கும் பல ரயில்களும் நிறுத்தப்பட்டன.

ஆனால், கோவை - போத்தனூர் - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் பாதை அகலப்பாதையாக மாற்றப்பட்டு சுமார் நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரைகோவை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பல ரயில்கள் இந்த கோவை - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் பாதையில் அகலப்பாதை ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் லட்சக்கணக்கான தென் மாவட்ட மக்கள் உள்ளிட்ட பலர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

நீண்டதூர பயணத்துக்கு பேருந்துகளில் பயணிப்பதைவிட ரயில்களில் பயணிப்பதையேவயதானவர்கள் உள்பட பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். கட்டணம் குறைவாக இருப்பதுடன் பாதுகாப்பும், குறித்த நேரத்தில் சென்றடைய முடிகிறது என்பது உள்பட ரயில் போக்குவரத்து கொண்டுள்ள சிறப்பம்சங்களே இதற்குக் காரணம். மேலும் ரயில் வசதி இல்லாததால், கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகக் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிறுத்தப்பட்ட இந்த ரயில்களை மீண்டும் இயக்க,தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பயணிகளின் ஒன்றுபட்ட கருத்தாகும்.

ஆகவே கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான தென் மாவட்ட மக்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட கோவை – ராமேஸ்வரம் ரயிலை மீண்டும் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...