கோவை: வால்பாறை மலைச்சாலை புதுப்பிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோமீட்டர் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில் 40 கிலோ மீட்டர் மலைச் சாலையாக உள்ளது. இந்த சாலையை புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் மூன்று கட்டமாக 40 கொண்டை ஊசி வளைவில் இருந்து ஒரு நிறுவனத்தாரும் 25வது கொண்டை ஊசி வளைவில் இருந்து மற்றொரு நிறுவனத்தாரும் 16வது கொண்டை ஊசி வளைவில் இருந்து மற்றொரு நிறுவனத்தாரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்பணிகள் வெகுவிரைவாக மேற்கொள்ளப்படுகிறது.
வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரே சாலை மார்க்கம் உள்ளதால் நெடுஞ்சாலையில் தார்சாலை பராமரிக்கும் பணி நடைபெறுவதால் வாகனங்கள் செல்வதில் மிகுந்த காலதாமதமாகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலைப் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.