கோவையில் தொடரும் தரமில்லாத பிளாஸ்டிக் பயன்பாடு; 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம்

கோவையில் தொடரும் தரமில்லாத பிளாஸ்டிக் பயன்பாடு; 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம்


கோவை: கோவையில் இந்தாண்டில், இதுவரை தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் அன்னதானம் நடைபெறும் கோவில்களில் உணவுகளை கையாள்பவர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 60 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அவர்களுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை அறிந்து கொள்ளுதல், சமைத்தல், விநியோகம் என அனைத்திலும் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 

இவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் கீழ் வழங்கப்படும் போக் தரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், கோனியம்மன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சுகாதார தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இதுவரை 185 சில்லறை வியாபாரிகளுக்கு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு வியாபாரிக்கு 2-வது முறையாக புகையிலை பொருட்கள் விற்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல், தரமில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்திய 48 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.96 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...