விதிகளுக்குப் புறம்பாக ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு: கோவை பேரூர் கல்வி அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

கோவை: விதிமுறைகளுக்கு புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில், ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: விதிமுறைகளுக்கு புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில், ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு, பதவி உயர்வு வழங்காததைக் கண்டித்து, பேரூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவறை எழுத்தாளராக உள்ள நான்கு பேருக்கு, உரிய தகுதிகள் இருந்தும் ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அத்துடன் காலியிடத்தில் விதிமுறைகளை மீறி வேறு நபர்களுக்கு கடந்தாண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால், கிட்டத்தட்ட 8.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இரவு உணவு சமைத்துச் சாப்பிட்டனர். இதற்கிடையே குனியமுத்துார் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் குறித்து தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரூர் கல்வி மாவட்ட தலைவர் அறிவுமணி கூறுகையில், விதிமுறைகளுக்குப் புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'என்றார்.

பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் கூறுகையில்,'நான் பொறுப்பேற்றபிறகு, எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. தற்போது ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக இல்லாததால் என் அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாது,'என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...