கோவை: கோவை மாநகரைச் சுற்றியுள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதுதொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர் பகுதியில் அடிக்கடி போலீசார் சோதனை செய்யும்போது லாரிகள் மற்றும் மினி வேன்களில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை பிடித்து வருகின்றனர். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணம்பட்டி பகுதியில் சோதனைச்சாவடியில் போலீசார் பணியில் இருந்தபோது ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரி முழுவதும் புகையிலை, குட்கா, பான்பராக் போன்ற பொருட்களை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சரணம்பட்டி பகுதியில் உள்ள குடோனுக்கு புகையிலைப் பொருள்களை கொண்டுபோவதாக கூறினார். இதையடுத்து அந்த குடோனை திறந்து பார்த்தபோது அங்கு டன் கணக்கில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அங்கிருந்து சில்லறை விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்படுவதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த சூழலில் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அமோகமாக விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
இந்நிலையில் கோவை செட்டி வீதி, வி.சி.வி.ரோடு, ஆர்.ஜி.வீதி, டவுன் ஹால், புலியகுளம், செட்டிபாளையம் ரோடு, எல்.ஜி.நகர், கோவைபுதூர், மெயின் ரோடு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 210 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.