கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதையில் அரசு பஸ்மீது கல்வீசி சேதம் விளைவித்த 2 பேரின் ஜாமீன் மனுவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கோவை காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் சென்றபோது குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.
இதுகுறித்து பஸ் நடத்துனர் ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், கே.கே.புதுார் நான்காவது வீதியைச் சேர்ந்த கார்த்திக், சதாம் உசேன் ஆகியோர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கடந்த 10-ம் தேதி கைது செய்தனர். அவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி, அவர்களது ஜாமீன்மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.