கோவை செல்வபுரத்தில் பூட்டிக்கிடந்த வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு!

கோவை: கோவை செல்வபுரத்தில் பூட்டிக்கிடந்த வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டது.


கோவை: கோவை செல்வபுரத்தில் பூட்டிக்கிடந்த வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டது.

கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ஈரோடு வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் காஜாமைதீன். வியாபாரியான இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீடு உடைக்கப்பட்டு, பீரோ அலங்கோலமாகக் கிடந்தது. தகவலறிந்த காஜா மைதீனின் தம்பி தமீம் அன்சாரி செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தமீம் அன்சாரி செல்வபுரம் பகுதியில் உள்ள ஜாக் பள்ளிவாசலின் தலைவராக உள்ளார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 5 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...