கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் திட்டப்பணிகள்: அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்!

கோவை: கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.



தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌ மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ கோவைப்புதூர்‌ முல்லை நகரில்‌ ரூ.71 கோடியே 68 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நிறைவேற்றப்பட்ட குடிநீர் திட்டத்தையும்‌, 89-வது வார்டுக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர்‌ அன்பு நகர்‌ பகுதியில்‌ ரூ.75 லட்சத்து 64 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட 2.50 லட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டியையும்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி ‌பொதுமக்கள்‌ பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சியுடன்‌ புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளுக்கான குடிநீர்‌ அபிவிருத்தித்‌ திட்டம்‌ (பகுதி 2) ரூ.165.43 கோடி ஆகும்‌. இதில்‌ பில்லூர்‌, சிறுவாணி மற்றும்‌ ஆழியாறு நீராதாரங்கள்‌ மூலம்‌ கோயம்புத்தூருக்கு வழங்கப்பட்டும்‌ மொத்த குடிநீரின்‌ அளவு போதுமானதாக இருந்தபோதும்‌, புதிதாக இணைக்கப்பட்ட குனியமுத்தூர்‌, குறிச்சி பகுதிகளுக்கு தற்போதைய குடிநீர்‌ விநியோக அளவு, நபர்‌ ஒருவருக்கு நாள்‌ ஒன்றுக்கு 70 லிட்டர்‌ என்ற விகிதத்தில்‌ 6 நாள்‌ முதல்‌ 8 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டு முதல்‌ நான்கு நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர்‌ விநியோகிக்கும்‌ பொருட்டு குனியமுத்தூர்‌ பகுதிகளுக்கு ரூ.71.68 கோடி மதிப்பீட்டில்‌ உட்கட்டமைப்பு வசதிகளான மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியையும்‌, இத்திட்டத்தில்‌ புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள்‌ மற்றும்‌ பகிர்மானக்குழாய்கள்‌ மூலம் போதிய அழுத்தத்துடன்‌ கூடுதல்‌ குடிநீர்‌ குனியமுத்தூரிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும்‌ நாளொன்றுக்கு நபர்‌ ஒருவருக்கு 135 லிட்டர் என்ற விகிதத்தில்‌ சமமாக பகிர்ந்து இரண்டு முதல்‌ நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்‌ விநியோகம்‌ வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்‌ கோவைப்புதூர்‌ பிரிவு அருகே சிறுவாணி குடிநீர்‌ எடுக்கப்பட்டு, அருகே‌ புதிதாக கட்டப்பட்டுள்ள 15 லட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு தரைமட்ட நீர்த்தேக்கத்‌ தொட்டியில்‌ பெறப்பட்டு அங்கிருந்து புதிய மின்‌ மோட்டார்‌ மூலம்‌ 15.20கிலோ மீட்டர் நீளமுள்ள குழாய்கள்‌ வாயிலாக குனியமுத்தூர்‌ பகுதியில்‌ உள்ள பிரஸ்‌ என்கிளேவ்வில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள 15 லட்சம்‌ லிட்டர்‌ பிரதான சமநிலை தொட்டிக்கும்‌, பிள்ளையார்புரத்தில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள 20 லட்சம்‌ லிட்டர்‌ பிரதான சமநிலை தொட்டிக்கும்‌ கொண்டு செல்லப்படும்‌.

குனியமுத்தூர்‌ பகுதிகளுக்கு பிரஸ்‌ என்கிளேவ்‌ பிரதான சமநிலை தொட்டியிலிருந்து குடிநீர் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 எண்ணம்‌ மற்றும்‌ தற்போது இயக்கத்தில்‌ உள்ள 18 எண்ணம்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கு புதிதாக பதிக்கப்பட்டுள்ள 21 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள குழாய்கள்‌ மூலம்‌ அனுப்பப்படும்‌.

இப்பகுதியில்‌ பகிர்மான குழாய்கள்‌ வரை, தற்போது இயக்கத்தில்‌ உள்ள 237.63 கிலோமீட்டர் நீள குழாய்களுடன்‌, புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டிகள்‌ மூலம்‌ வளர்ச்சியடைந்த பகுதிகளுக்கு 65.20 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய்கள்‌ பதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌ புதிய வீட்டுக்‌ குழாய்‌ இணைப்புகள்‌ 20 ஆயிரம் குடியிருப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ ராமதுரைமுருகன்‌, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ தி.ரா.ரவி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய தலைமைப் பொறியாளர்‌ ரவீந்திரன்‌, கண்காணிப்பு பொறியாளா்‌ ரகுபதி, ஆலோசகர்‌ சம்பத்குமார்‌, செயற்பொறியாளர்‌ லட்சுமணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...