தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிக் கோரியும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குதல் உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட், தன் மீதும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மா.ரவிச்சந்திரன் அவர்கள் மீதும் பள்ளிக்கல்வித்துறையினரால் எடுக்கப்பட்ட 17(ஆ) நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்கள் பெற்று வந்த உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 37, 116 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...