சிறுவாணி அணையில் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது; கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை : அதிகாரிகள் தகவல்
கோவை: கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை, என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வார்டுகள் மட்டுமின்றி வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்டன. குறிப்பாக, கோவையின் முக்கிய ஆதாரமான குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையும் நிரம்பியது.
கடந்த சில வாரங்களாக கோவையில் மழையின்றி காணப்படுகிறது. இதனிடையே, இந்த அணையில் இருந்து நாள்தோறும் 82 முதல் 90 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டும் குறைந்து வருகிறது. தற்போது அணையில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கடந்தாண்டு மட்டுமின்றி, கடந்த ஜனவரி மாதமும் சிறுவாணி அணை பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால், அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது. அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால், அணை நீர்மட்டம் 33 அடியாக குறைந்து உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள தண்ணீரை பயன்படுத்தி கோடை காலத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது அணையில் இருந்து தினமும் 82 எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.