கோவை: கோவை ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி ஒருவர் பலியானார்.

டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த ரயில் இன்று கோவை பீளமேடு புருக்பீல்டுமால் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. திடீரென ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து பொதுமக்கள் இறங்கி சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் ரயிலில் அடிபட்ட உடல் துண்டான நிலையில் கிடப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கோவை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். இறந்தவர் யார் என்பது தெரியவில்லை. ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அவர் ரயில் முன் பாய்வதற்கு தயாராக இருந்ததைப் பார்த்து டிரைவர் நிறுத்தினாரா என்பது போன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.