கோவையில் கால், கையை கட்டப்பட்ட நிலையில் வங்கி அதிகாரி பிணம்: திருமணம் நடக்காத விரக்தியில் தற்கொலையா?

கோவை: கோவையில் வங்கி அதிகாரி ஒருவர் கைகால் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையாததால் மன உளைச்சல் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


கோவை: கோவையில் வங்கி அதிகாரி ஒருவர் கைகால் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் வரன் அமையாததால் மன உளைச்சல் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் சுந்தர்ராஜ் (வயது 29). இவர் நாமக்கல் மாவட்டம் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். கோவை சரவணம்பட்டியில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கால்கள் கட்டப்பட்டு, கைகளை கட்டப்பட்டு, கழுத்தில்தூக்குபோட்டு பிணமாக தொங்கியதைக் கண்டனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், இவருக்கு மணப்பெண் அமையாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்தனர். இருந்தாலும் சரவணம்பட்டி போலீசார்வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...