கோவை அரசு மருத்துவமனையில் டாக்டர் லேப்டாப், மோட்டார் சைக்கிள் திருட்டு!

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று டாக்டர் மற்றும் ஜோதிடரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று டாக்டர் மற்றும் ஜோதிடரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.

கோவை அருகே உள்ள காரணம் பேட்டையைச் சேர்ந்தவர் வைரவன். ஜோதிடரான இவர் இறந்த ஒருவரின் உடலைப் பார்ப்பதற்காக நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு பிரேத பரிசோதனை பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

இந்நிலையில் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு டாக்டராக பணியாற்றும் பிரனேஷ் என்பவரது அறையில் இருந்த லேப்டாப்பையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.

கோவை அரசு மருத்துவமனை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் போலீஸ் ரோந்துப் பணி சரிவர நடைபெறவில்லை என்றும், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏழை எளிய மக்களே. அவர்களைப் பாதுகாக்க போலீஸ் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவிஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுமருத்துவமனையில் திருட்டைத் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...