கோவை: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் முகாமில் யானைகள் தும்பிக்கையால் கட்டித்தழுவி, ஒன்றுடன் ஒன்று கொஞ்சி மகிழ்ந்து உற்சாகத்தில் திளைக்கின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி, பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது. முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இங்குள்ள யானைகளுக்கு தினமும் நடைப்பயிற்சி மற்றும் சத்தான இயற்கை உணவுகள் வழங்கப்பட்டு வருவதால் அவை மிகவும் மகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் பல்வேறு செயல்களைச் செய்து காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகின்றன.
முகாமில் கலந்துகொண்டுள்ள யானைகள் நட்புடனும், தோழமையுடனும் பழகி வருகின்றன. துதிக்கைகளை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைத்து தங்களது முத்தங்களை பரிமாறி வருகின்றன. குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி இந்தி மொழியில் பாகன் கூறும் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த யானையும் கோவையை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணியும் நட்புடன் இணக்கமாக பழகி வருகின்றன.
முகாமில் நடைப்பயிற்சி மற்றும் குளியலுக்கு செல்லும்போது இந்த இரண்டு யானைகளும் ஒன்றாக உற்சாகத்துடன் குதூகலமாக சென்று வருகின்றன. குறிப்பாக காலையில் குளிக்கச் செல்லும்போது மிகுந்த உற்சாகத்துடன் துதிக்கையால் வாளியை தூக்கியபடி செல்வதைப் பார்க்க அழகாக இருக்கிறது. இது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.